Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சாக்கு பையால் மூடப்பட்டுள்ள சீட்டுகள்” சிரமப்படும் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து பந்தலூர், அய்யன்கொல்லி சேரம்பாடி, உப்பட்டி, மழவன்சேரம்பாடி வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்தந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் அரசு பேருந்தின் இருக்கைகள் உடைந்து காணப்படுவதை மறைப்பதற்காக சாக்குப் பைகளை போட்டு மூடி வைத்துள்ளனர்.

மேலும் பேருந்தின் ஓரத்தில் தகர சீட்டுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இது குறித்து பயணிகள் கூறும்போது, பந்தலூர், கூடலூர் தாலுகாவில் பேருந்து வசதி சரியாக இருப்பதில்லை. மேலும் பழுதடைந்த பேருந்துகளை இயக்குவதால் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே பழைய பேருந்துகளை சீரமைத்து நல்ல முறையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |