Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாக்கு மூட்டையில் இதுவா இருக்கு…. மாட்டி கொண்ட 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையை திறந்து பார்த்தபோது அதில் 140 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தில் வசித்து வரும் ஜெயபிரகாஷ், மணிகண்டன் என்பதும் சேலம் மாவட்டத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோன்று சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சின்னசேலம் அண்ணா நகர் ரயில்வே கேட் அருகில் சாக்கு மூட்டையுடன் சந்தேகத்தின்படி நின்று கொண்டிருந்த 2 பேரிடம் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 2 சாக்குமூட்டையில் 64 மதுபாட்டில்கள் இருப்பதை  காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சின்னராஜ், கடை வீதியை சேர்ந்த கோபிநாத் என்பதும் மதுபாட்டில்களை ஆத்தூருக்கு கடத்த செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |