திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே போலீஸ்காரர் முனீஸ், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு தங்கபாண்டியன் ஆகியோர் சித்தரேவு முத்தாலம்மன் கோவில் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் வந்தனர். அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை கண்டதும் மோட்டார் புடவைகளின் பின்னாடி அமர்ந்து கொண்டிருந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அய்யம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நவநீதன் ( 34 ) என்பது தெரியவந்தது. மேலும் வைத்திருந்த சாக்கு மூட்டையை காவல்துறையினர் சோதனை செய்ததில், அதில் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு, மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.