Categories
அரசியல் மாநில செய்திகள்

சாக்லேட் கொடுத்த சசிகலா…… “அதிமுகவை அழிக்கும் ஈபிஎஸ்”…. சந்திப்புக்கு பின் வைத்திலிங்கம் பேசியது என்ன?

சசிகலாவை எதைச்சையாக சந்தித்தேன் என்று ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்..

சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.. தஞ்சாவூரில் திருமண விழாக்கள், கோவில் விழாக்கள், தொண்டர்கள்  சந்திப்பு என சுற்றுப்பயணத்தில்ஈடுபட்டு வருகிறார் சசிகலா. இந்நிலையில் ஒரத்தநாடு அருகே ஓவல்குடியில் திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்பதற்காக சென்றபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கமும் அங்கு வந்திருந்தார்.. இருவரும் சந்தித்து பேசினர்.

அப்போது இன்று வைத்திலிங்கம் தனது பிறந்தநாள் என்று அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் சாக்லேட் கொடுத்துள்ளார்.  ஒற்றை தலைமை பிரச்சனை அதிமுகவில் தொடர்ச்சியாக இருந்து வரக்கூடிய சூழலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா சொல்லி வருகிறார்.. ஓபிஎஸ்சும் அதே கருத்தை கூறி வரும் நிலையில், இருவரது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தஞ்சையில் ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் ஒற்றுமை தேவை, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்க பார்க்கிறார் இபிஎஸ். சசிகலாவை எதைச்சையாக சந்தித்தேன், அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை என்று தெரிவித்தார்..

Categories

Tech |