தி லெஜெண்ட் சரவணனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன், அவர்களே விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற ஜூலை 28ஆம் தேதி திரையில் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கழுவி கழுவி ஊற்றினார்கள். மேலும் பல ட்ரோல்கள் வைரலானது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சரவணன் தற்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருக்கின்றார். அந்த வகையில் ஸ்லிம்மான லுக்கில் பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது தற்பொழுது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.