சாக்லேட் வாங்குவதற்காக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சாக்லேட் வாங்குவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு படையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையை குறிக்கும் ஷால்டா நதிக்கு அருகிலுள்ள வங்கதேச கிராமத்தில் வசிக்கும் யமன் ஹூசைன் என்ற சிறுவன் திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்தில் தனக்கு பிடித்த இந்திய சாக்லேட் வாங்க வேண்டும் என்பதற்காக ஆற்றை கடந்து வந்துள்ளான்.
அவரிடம் விசாரித்ததில் தான் சாக்லேட் வாங்குவதற்காக இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறினார். அவரிடம் 100 ரூபாயும் இருந்தது. இந்தியாவிலுள்ளகலம்சௌரா கிராமத்தில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்க முள்வேலியில் உள்ள துளை வழியாக பதுங்கிச் சென்று அதே வழியில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தான், இந்த முறை அவன் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். வங்கத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி மளிகை பொருட்களை வாங்குவதற்காகவும், சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்து வருவது தொடர்கதையாகி வருகின்றது. பொதுவாக எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் புறக்கணித்து சந்தேகத்தின் அடிப்படையிலான நபர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .அந்த சிறுவன் சாக்லேட் வாங்க மட்டும் வந்திருப்பதாக குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.