தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பங்களாவில் கொள்ளை சம்பவமும் நடந்ததுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.மேலும் அந்த விசாரணையின் போது, ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் கொலை மற்றும் கொள்ளை நடந்திருப்பது வேதனையாக உள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க போலீசாருக்கு துணை நின்று சாட்சி அளிப்பேன் எனவும் சசிகலா கூறியுள்ளார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.