திருச்சி கே.கே. நகரில் கார் உதிரி பாகன நிறுவனத்தில் புகுந்து, அதன் உரிமையாளரை மிரட்டியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபாகரனை பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் டுவிட் செய்தவரை மிரட்டியதற்காக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேரை 143, 447, 294(b), 592(2) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நான்கு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Categories