இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் வித்தியாசமான இயக்குனர்கள் பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவராக திகழ்கிறார். இவர் முதன்முதலாக ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்யகாண்டம் படத்தின் உதவி இயக்குனராகவும், இறுதி சுற்று படத்தின் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர் அருள் மாதேஸ்வரன்.
இவர் தற்போது செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதன்பின் கொரோனா ஊரடங்கு போன்ற காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான ராக்கி படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் இயக்குனர் அருள் மாதேஸ்வரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘சாணிக் காயிதம்’ படத்தை சென்சார் செய்த அதிகாரிகள் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சென்சாரில் பல காட்சிகளை வெட்ட சொல்லிவிட்டார்கள். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
அதற்காக தனது கண்டனங்களையும் தெரிவித்திருக்கின்றார். மேலும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் ரசித்து பார்த்த பல காட்சிகள் படத்தில் இருக்காது என்பது மிகப்பெரிய துரதிருஷ்டம் எனவும் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘சாணிக் காயிதம்’ படம் நாளைய தினம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.