சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள 3:33 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது 3:33 படத்தின் மூலம் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ருதி செல்வம், ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Back On Track !#MoonuMuppathiMoonu is All set to Release on December 3rd#333FromDec3 @menongautham @iamSandy_Off @Bamboo_Trees @ProducerJeevi @NAMBIKAICHANDRU @sathishmanohara @rameemusic @DeepakDFT @Shruthiselvam_ @reshupasupuleti @divomusicindia@teamaimpr @VanquishMedia__ pic.twitter.com/1GTKENQetw
— Bamboo Trees Productions (@Bamboo_Trees) November 15, 2021
மேலும் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாம்பூ ட்ரீ புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார் . இந்த படம் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 3:33 படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.