Categories
சினிமா தமிழ் சினிமா

சாண்டி மாஸ்டர் வீட்டில் விசேஷம்… வெளியான கலக்கல் புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக கலக்கி வருபவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இவர் இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில் உருவான கர்ணன், குட்டி பட்டாஸ் ஆல்பம் போன்ற பல பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது ‌.

இந்நிலையில் சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். தற்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சாண்டி மாஸ்டர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |