தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்விச் தீவு அமைந்திருக்கிறது. இந்த தீவில் இன்று காலை 8.33 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 வாக பதிவாகி இருக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தெற்கு ஜார்ஜியா தீவிலிருந்து 470 மைல்கள் தொலைவில் இந்த தீப அமைந்திருக்கிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Categories