Categories
தேசிய செய்திகள்

“சாதனைக்கு வயது ஒரு தடையில்லை”….. 56 வயதில் 26 முறை எவரெஸ்ட்டில் ஏறி….. பழங்குடி நபர் சாதனை….!!!!

நேபாளத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் உலகின் மிகப்பெரிய மலையான எவரெஸ்ட் சிகரத்தில் 26 முறை ஏறி சாதனை படைத்துள்ளார்.

உலகின் உயரமான மலை சிகரங்களை கொண்டது நேபாளம். கொரோனா தொற்று காரணமாக மலை ஏறுவதற்கு வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முதல் மீண்டும் மலை சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்டில் மலை ஏற மொத்தம் 316 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் நேபாளத்தை சேர்ந்த  கமி ரீட்டா என்பவர் எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் 26 ஆவது முறையாக ஏறி தன் பழைய சாதனையை முறியடித்துள்ளார். இவர் ஷெர்பா எனப்படும் இமயமலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர். கமி ரீட்டா உள்ளிட்ட 11 பேர் அடங்கிய குழு நேற்று முன்தினம் 8, 848 மீட்டர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.

 

Categories

Tech |