சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் நிரூபித்துள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த சியாமளா என்பவர் இலங்கையின் தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 300 மைல் தூரத்தை நீந்தி சாதனை படைத்துள்ளார். 47 வயதாகும் இவர் வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 13 மணிநேரம் 43 நிமிடத்தில் நீந்தி இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் இந்த சாதனையை படைத்த இரண்டாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.