தலைசிறந்த பெண்மணி உமா பிரேமனின் வாழ்க்கை கதையை டிராபிக் ராமசாமி படத்தை இயக்கிய விக்னேஸ்வரன் விஜயன் இயக்குகிறார்.
சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து பல எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் உமா பிரேமன். இவர் ஏறக்குறைய இரண்டு லட்சம் டயாலிசிஸ்கள், நூற்றுக்கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள், இருபதாயிரத்திற்கும் மேலான இதய அறுவை சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள், பள்ளிக்கூடங்கள் என லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றியமைத்தவர்.
இப்படி பல சாதனைகள் செய்த இவருக்கு இந்திய குடியரசு தலைவரின் மாளிகையில் விருதும், விருந்தும் கொடுத்து கௌரவிக்கப்பட்டது. தற்போது இவருடைய வாழ்க்கை கதை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எஸ். ஏ .சந்திரசேகர் நடிப்பில் வெளியான ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் இயக்குனர் விக்னேஸ்வரன் விஜயன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் தலைப்பு, நடிகர்கள், நடிகைகள், குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.