Categories
அரசியல் சற்றுமுன்

சாதனை நிறையா இருக்கு…. சொல்லிட்டா பொறாமை வரும்…. திண்டுக்கல்லை திணறடித்த ஸ்டாலின் ….!!

திமுக ஆட்சியில் செய்தது குறித்து முக.ஸ்டாலின் பட்டியலிட்டு திண்டுக்கல் மாவட்ட மக்களை திணறடித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக நடத்தும் சிறப்பு பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் முக. ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் செய்திருக்கும் சாதனைகளை தொகுதிவாரியாக கூற முடியும். அதை கூற ஆரம்பித்தால் மற்ற பகுதியில் இருப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் கழக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், காவல் நிலையங்கள், திருமண மண்டபங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிய பேருந்து வழித்தடங்கள், மகளிர் விடுதிகள், சாலை விரிவாக்கம், குடிநீர் தொட்டிகள், நியாயவிலைக் கடைகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

மாங்கரை ஆற்றின் குறுக்கே 8 பாலங்கள், பழனிக்குச் செல்லும் பக்தர்கள் நடக்க ஐந்து கோடி செலவில் நடைப்பாதை, திண்டுக்கல் ரயில்வே மேம்பாலம், யானை விழுந்தான் ஓடையின் குறுக்கே அணை, நலதங்காள் ஆற்றின் குறுக்கே அணை, திருமலை ஆற்றின் குறுக்கே அணை, சுக்காம்பட்டி, ரெட்டியார்சத்திரம், பஞ்சம்பட்டி, அய்யம்பட்டி ஆகிய இடங்களில் உயரழுத்த மின் நிலையங்கள் ரெட்டியார்சத்திரம் அருகே அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி, கன்னிவாடியில் மகளிர் விடுதி மற்றும் மாணவர் விடுதிகள், மருதாநதி அணையில் கிணறு அமைத்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக குழாய் பதித்து 20 வருடகால குடிநீர் பிரச்சனை கழக ஆட்சியில் நிவர்த்தி செய்யப்பட்டது.

அய்யன்கோட்டை பொதுமக்கள் கடந்து போகும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டது. அய்யங்கோட்டை கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மதுரையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அதற்கான அலுவலகக் கட்டடங்களை கட்டி கொடுத்தது கழக ஆட்சியில் தான். இவ்வாறு பலவற்றை கூறிக் கொண்டே போகலாம் இவ்வாறு பட்டியல் போடுவதற்கு எடப்பாடிபழனிசாமி அல்லது திண்டுக்கல் சீனிவாசன் தயாராக இருக்கிறார்களா?

திண்டுக்கல்லுக்கு அமைச்சர் என்று சீனிவாசன் இருக்கிறார். அவரால் இந்த நாட்டிற்கு கிடைத்த ஒரே நன்மை அம்மா இட்லி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய். நாங்கள் நாட்டிற்கு பொய்தான் கூறினோம். சீனிவாசன் கூறியது மட்டும் தான் இந்த நாட்டிற்கு கிடைத்த நன்மையே தவிர வேறு எதுவும் இல்லை. திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஐந்து வருடங்களாக இந்த தொகுதிக்கு என்ன நன்மையை செய்தார் என்பதை சொன்னால் நான் என்னைத் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன் என ஸ்டாலின் கூறினார்

Categories

Tech |