சாதனை படைக்க அணிகளின் மீது நின்று பட்டதாரிப் பெண் பறை இசைத்து சாதனை படைக்க முயற்சித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் அமைந்த தொண்டாமுத்தூர் பூலுவாம்பட்டியை சேர்ந்தவர் அருள்மொழி. 20 வயது பட்டதாரியான இவர் கடந்த சில வருடங்களாக பறை இசை கற்று வருகின்றார். பறை இசையில் சாதனை படைக்க அருள்மொழி விரும்பினார்.இதைப் பற்றி தனது குழுவினரிடம் ஆலோசனை செய்து பலகையில் ஆணிகளை அடித்து அதன் மேல் நின்று பறையிசை அடித்து சாதனை படைக்க விரும்பினார்.
இதைத்தொடர்ந்து நேற்று பீளமேடு காந்தி நகரில் அமைந்த கலைக்கூடம் ஒன்றில் அருள்மொழி காலை 10 மணி முதல் 11. 45 மணி வரை இடைவிடாமல் பலகையில் அடிக்கப்பட்ட ஆணிகளின் மேல் நின்று பறையடித்து வீடியோவாக பதிவு செய்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பினார். இதனைப்பற்றி அருள்மொழி கூறியதாவது, எனது தந்தை இறந்துவிட்டார்.
தாய் மற்றும் சகோதரர் கூலி வேலைக்கு செல்கின்றனர். எனது தந்தை கிராமிய நடனங்கள் ஆடி வந்தார். அதைத்தொடர்ந்து நானும் கல்லூரியில் படிக்கும்போதே பறையிசை அடிக்க கற்றுக் கொண்டேன். தற்பொழுது சாதனை முயற்சிக்காக பலகையில் அடிக்கப்பட்ட 2 1/2 இன்ஞ் உயரம் கொண்ட ஆணிகளின் மீது ஏறி நின்று 1¾ மணி நேரம் வரை பறை இசைத்தேன் . அதை வீடியோவாக எடுக்கப்பட்டு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளேன். அவர்கள் அந்த வீடியோவை பார்த்து ஆய்வு செய்து சான்றிதழ் தருவார்கள் என்று கூறினார்.