தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து இ சேவை மையங்களில் மாணவர்கள் சான்றுகளை கூட்டநெரிசல் இன்றி பெற்றுக் கொள்ள ஏதுவாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் எவ்வித இடையூறுமின்றி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களை அலைக்கழிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.