Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாதிப்பெயரை சொல்லி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி… பொதுமக்கள் சப் கலெக்டரிடம் மனு…!!!

சாதி பெயரை சொல்லி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நல்லூத்துக்குளி சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கொடுத்த மனுவில் கூறியதாவது, நல்லூத்துக்குளி மேற்கு காலனியில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 குழந்தைகள் படித்து வருகிறார்கள். அதே பகுதியில் உள்ள சில மாணவர்கள் எங்கள் சமூகத்தை சேர்ந்த மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டி விளையாட்டில் சேர்க்க மாட்டோம் என்று அடித்து விரட்டினார்கள்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆதலால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தான் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம். இதுகுறித்து விசாரணை நடத்தி தீர்வு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |