இந்தியா சுதந்திரமடைந்து 70 வருடங்களைத் தாண்டிய போதிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் பல இடங்களிலும், ஊர்களிலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமின்றி சாதிச் சண்டைகளும், கலவரங்களும் நிகழ்வதும் வாடிக்கையான செய்திகளாகவே இருக்கிறது. இந்நிலையில் சாதிய பாகுபாடுகளைக் களைந்து மக்கள் சமத்துவத்துடன் வாழ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முன்னோடியாக செயல்படும் கிராமங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.