Categories
மாநில செய்திகள்

சாதியை குறிப்பிட்டு பேசிய….. பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் அனுராதா பணியிடை நீக்கம்..!!

பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு உதவி பெறும் கல்லூரியாக  பச்சையப்பன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பச்சையப்பன் டிரஸ்ட் என்று சொல்லக்கூடிய ஒரு நீண்ட காலமாக நடைபெற்று வரக்கூடிய அந்த கல்லூரியில், சில தினங்களுக்கு முன்பு தமிழ்த்துறை தலைவர் அனுராதா மாணவர் ஒருவரிடம் சாதியை குறிப்பிட்டு பேசிய உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து, அங்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது தமிழ் துறையின் (ஹெச்.ஓ.டி)  தலைவரான அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணமும் குறிப்பிடப்பட்டுள்ளது.  நீதியரசர் ராஜு அனுமதியுடன் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி செயலாளர் துரை கண்ணு உத்தரவிட்டார்..

Categories

Tech |