Categories
மாநில செய்திகள்

“சாதிய பாகுபாடால் எழுந்த பிரச்சனை” மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்….. இறையன்பு திடீர் அதிரடி….!!!

தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமைச் செயலகம்,  மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கண்டிப்பாக தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். இந்த தேசிய கொடியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏற்ற வேண்டும். இந்நிலையில் ஒரு சிலர் ஜாதி பாகுபாடுகள் காரணமாக கிராம ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்ட பிறகும் அதை வேறு வடிவத்தில் கையில் எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோரின் கடமையை செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவரை வேண்டுமென்றே அவமதிப்பவர் மற்றும் பொதுமக்கள் பார்வையில் படும்படி அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை கருத்தில் கொண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அனைத்து தலைமை அலுவலகத்திலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். இது தொடர்பாக ஒரு அறிக்கை தயார் செய்து மாவட்ட ஆட்சியர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசுக்கு அனுப்ப வேண்டும். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களால் எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து அலுவலகங்களிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |