தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி பொது வாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவன் பெரியாரை நினைவு கூறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சாதி கொடுமை, தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்த பகுத்தறிவு பகலவன், சமூக சீர்திருத்தவாதி, வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று. சாமி கும்பிடுகிறேன் என்பதற்கு எதிரானது அல்ல பகுத்தறிவு. “கும்பிடுறேன் சாமி” என்பதற்கு எதிரானது பகுத்தறிவு. உண்மையான பகுத்தறிவாதிக்கு மனிதரைத் தவிர வேறு எந்த பற்றும் இருக்கவும் கூடாது என்று சூளுரைத்தவர். அவரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது வருகின்றது.
இந்நிலையில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்து எறிந்தவர். சுய மரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொது வாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவு நாளில் நினைவு கூர்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.