Categories
தேசிய செய்திகள்

சாதிய பாகுபாட்டின் உச்சம்… குடிநீரில் மலம், இரட்டைக் குவளை… அடுத்தடுத்து பாயும் வழக்குகள் … மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் அடுத்த வேங்கை வயல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நிலவி வந்த சாதிய பாகுபாட்டின் உச்சமாக தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை சிலர் கலந்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நீரை அருந்திய குழந்தைகள் உட்பட பொதுமக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடிநீரில் தான் பிரச்சனை என மருத்துவர்கள் கூறியுள்ளார். உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியை  சென்று பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்த விஷயம் தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதல் ஆட்சியர் வரை பலருக்கும் புகார் சென்றுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் அங்கு வந்த பிறகுதான் அந்த கிராம மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து தெரியவந்துள்ளது. அதாவது இறையூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல தலைமுறைகளாக அய்யனார் கோவிலில் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று அனைவரையும் வழிபட வைத்துள்ளார். அப்போது கோவில் பூசாரியான ராஜன் என்பவரது மனைவி சிங்கமாளுக்கு திடீரென சாமி வந்துவிட்டது. இதனைதொடர்ந்து  அவர் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசியும், கோவிலுக்குள் செல்லக்கூடாது என சாமியாடியது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சிங்கம்மாள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். அதன் பின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிங்கம்மாள் மற்றும் அஞ்சப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே சிங்கம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இடையூறு கிராமத்தில் உள்ள தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்யபோது இரட்டை குவளை பயன்படுத்தியதற்கான ஆதாரம் கிடைத்தது. உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த கடையின் உரிமையாளர் மூக்கையா, மீனாட்சி தம்பதியினரை கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ? அவர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |