Categories
மாநில செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தப்படும் – தமிழக அரசு!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்த ஒன்றிய அரசுக்கும் வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..

சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.. இதில், பிற்படுத்தப்பட்டோர் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்த ஒன்றிய அரசுக்கும் வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..

தொடர்ச்சியாக சட்ட பேரவையில் ஒவ்வொருநாளும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி கொண்டே வருகிறது.. இன்று காலை, மாலை என இருவேளைகளில் சட்டப் பேரவை நிகழ்வு நடைபெற இருக்கிறது.. வரும் 13ஆம் தேதியுடன் சட்டப்பேரவை தொடர் முடிவடைய இருக்கிறது.

Categories

Tech |