Categories
மாநில செய்திகள்

“சாதி அடிப்படையில் பணி மாறுதல்”…. ஃபேஷன் டெக்னாலஜி நிறுவன இயக்குனர் மீது புகார்…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை தரமணியில் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக அனிதா மேபெல் மனோகர் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த உதவி இயக்குனர் இளஞ்செழியன் மீது அனிதா மேபெல் மனோகரன் சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக உதவி இயக்குனரான இளஞ்செழியன் அலுவலக கல்வி நிறுவனத்தின் பிரதான கட்டிடத்தில் இயங்கி வந்தது. அந்த அலுவலகத்தை மாணவர் விடுதிக்கு மாற்றி உத்தரவிட்ட இயக்குனர் அனிதா அந்த அலுவலகத்தை உயர் வகுப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்த கொடுத்துள்ளார். இதனை எதிர்த்த மூத்த உதவி இயக்குனர் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதி அனுப்பினார்.

இதனையடுத்து டெல்லி அதிகாரிகள் விசாரணை செய்து மீண்டும் பிரதான கட்டிடத்திலேயே அலுவலகம் ஒதுக்க உத்தரவிட்டனர். ஆனால் அனிதா அதை செயல்படுத்தாமல் மூத்த உதவி இயக்குனரை  அதே விடுதி அலுவலகத்தில் இயங்க வற்புறுத்தியுள்ளார். எனவே உயரதிகாரிகள் உத்தரவை செயல்படுத்தாததால்அனிதா மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தரமணி உதவியாளரிடம் இளஞ்செழியன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அனிதா மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய இயக்குனர் மீதான புகாரை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது என்று காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனிதா மனுவை விசாரித்த கோர்ட் விசாரணை என்ற பெயரில் மனுதாரரை வற்புறுத்தக் கூடாது என ஆணையிட்டது. இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

Categories

Tech |