Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதி பார்த்து ஓட்டு போடாதீங்க…. சாதிப்பவனை பார்த்து ஓட்டு போடுங்க – கமல் பிரச்சாரம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க மக்களிடையே நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடும் போது மற்ற கட்சியினரின் அறிக்கைகள் குறித்து விமர்சனமும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கமல் மக்களோடு மக்களாக கலந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஆட்டோவில் பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல், சாதி பார்த்து ஓட்டுப் போடாதீர்கள்; சாதிப்பவனைப் பார்த்து ஓட்டுப் போடுங்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |