விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் கோடியில் ஒருவன் எனும் படம் வெளியாகி உள்ளது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், காக்கி, வளிமயில் போன்ற பல படங்கள் அவரது நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதில் ரத்தம் படத்தை தமிழ் படம் பட இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கியிருக்கின்றார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து நடிப்பதோடு முதன்முறையாக இயக்குனராகவும் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி சமீப காலமாக twitterல் அதிகம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக சமூக நிகழ்வுகளுக்கு தனது குரலை பதிவு செய்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு பற்றி பதிவிட்ட அவர் குற்றவாளி சதீஷை ரயில் முன் தள்ளிவிட்டு கொள்ள வேண்டும் என பதிவிட்டிருந்தார். இந்த சூழலில் தனது twitter பக்கத்தில் கடவுள் என் முன்னாடி வந்தால் சாதி மதம், கோவில், சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு வறுமை கொலை, கொள்ளை ஒழித்துவிட்டு பேசாமல் நீங்க எங்க கூடவே இருந்தாங்க சார் கோரிக்கை வைப்பேன் ஆனால் நீங்க என்ன கேட்பீங்க என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.