சாத்தான்குளம் சாமானத்தை கண்டித்து நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தனது கண்டனத்தை விடியோவாக வெளியிட்டுள்ளார். அதில்,
கொரோனா வைரஸிடம் மாட்டிக்கிட்ட பலர் கூட உயிரோடு திரும்பி வந்திருக்காங்க. ஆனால் சாத்தான்குளம் சம்பவம் நினைத்து பார்க்கும்போது ஈர கொல நடுங்குது. கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ்காரர்கள் கடவுளின் பிறவிகளாக வேலை செய்தார்கள், அதை மறக்கவும் முடியாது, மறக்கவும் கூடாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இப்படிப்பட்ட கொடுமை காரங்க.இந்த சாத்தான்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.