சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதித்துறை நடுவர் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் உடம்பில் அதிக அளவு காயம் இருப்பதாகவும், இதனால் போலீஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தன் விசாரணைக்கு சாத்தான்குளம் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் நீதித்துறை நடுவர் தனது அறிக்கையில் கூறி இருப்பதால், மதுரை கிளை உயர் நீதிமன்ற கிளை, இந்த வழக்கில் வந்து ஒரு நொடி கூட நிதி தாமதிக்க கூடாது. நியாயத்திற்காக ஜெயராஜ் குடும்பத்தினர் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க எடுக்கும் வரை நெல்லை டிஐஜி அல்லது நெல்லை சிபிசிஐடி விசாரிக்க முடியுமா? என்று தமிழக அரசு 12 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இப்படி பரபரப்பாக இந்த வழக்கு போய் கொண்டு இருக்கும் நிலையில் அடுத்தடுத்த திருப்பமாக பல்வேறு நிகழ்வுகள் இந்த வழக்கில் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள் இருவரையும் ரிமாண்ட் செய்யும் போது இவர்கள் உடல்நிலையை தகுதியானது என்று சான்றளிக்க சாத்தான்குளம் மருத்துவமனையை அணுகியபோது அவர்களின் உடல்நிலையில் விபத்தினால் ஏற்பட்ட காயங்கள் மட்டுமே இருக்கின்றது.
உடல் நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று அறிக்கை அளித்த மருத்துவர் வெண்ணிலா தற்போது விடுப்பில் சென்றுள்ளார். மருத்துவர் வெண்ணிலா தான், ஜெயராஜ், பென்னிக்ஸ் கால் பாதத்தில் வீக்கம், ஆள்காட்டி விரலில் காயம், இடுப்பின் பின்பகுதியில் வீக்கம் இருந்ததாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவர் விடுப்பில் சென்று இருக்கிறார்.