Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் அருகே உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா”…. மூன்று நாட்கள் நடைபெற்ற பூஜைகள்…!!!!

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் உச்சிமாகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் மூன்று நாட்கள் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாளில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம், 108 மூலிகை திரவ ஹோமம் நடைபெற்றது.

இரண்டாம் நாளில் புண்ணிய வாசன வாசு, யாகாலை பூஜை நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று பிம்மசுத்தி சுவாமிகளுக்கு ஏஷா பந்தனம், யாகசாலை ஓமம், யாத்ராதானம், கடம் புறம்பாடு, விமான அபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு மகா அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பின் இரவு அம்பாள் வீதி உலா வருதல் நடந்தது.

Categories

Tech |