தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட தந்தை மகன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்த வழக்கில் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் டிரைவர் ஜெய சேகர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் ஒன்றை அளித்துள்ளார். அதில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ளே இருந்து தொடர்ந்து கதறல் சத்தம் கேட்டதாகவும், காவல் நிலையத்தில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக் வெளியில் வந்ததாகவும் ஜெயசேகர சாட்சியமளித்துள்ளார்.