தந்தை – மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றார்கள்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக கடந்த ஜூன் 19-ம் தேதி பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பத்து பேரிடம் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற உள்ளது. அந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தணிக்கையில் ஈடுபட்டவர்கள் அன்றைய பணிகளில் இருந்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அடையாள அட்டையை கொண்டு அவர்கள் கண்டுபிடித்த சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.
மேலும் சாத்தான்குளம் பென்னிக்ஸ் – ஜெயராஜ் உயிரிழந்த விவகாரம் குறித்து பென்னிக்ஸ் நண்பர்கள், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் என 10க்கும் நேர்பட்டவர்களிடமும் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது. முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தற்காலிகமாக செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.