அரக்கோணத்தில் சாதிய வன்மம் காரணமாக இளைஞர்கள் அர்ஜூன் மற்றும் சூர்யா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமாவளவன் அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும்படியும் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கில் உயிரிழந்த வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 4.12 லட்சம் மற்றும் மாதம் ரூ.5000 நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் நிவாரணத் தொகையை குடும்பத்தினரும் வழங்கினார்.