Categories
அரசியல் மாநில செய்திகள்

சாத்தூரையே சுற்றி சுற்றி வந்தவன் நான்… ராஜவர்மன் அதிரடி பேச்சு…!!!

சாத்தூர் மக்களை சுற்றி சுற்றி வந்து அவர்களுக்கு சேவை செய்ததால் தான் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பதாக ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிலும் சில காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன. அதன்படி அதிமுக கட்சியில் இருந்து பலரும் விலகிச் சென்று திமுக போன்ற பல கட்சிகளின் கூட்டணி வைத்துள்ளனர். அதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன. அதன்படி அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஆனால் அதில் முக்கிய எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிமுகவில் சீட் கிடைக்காததால் இன்று காலை அமமுக கட்சியில் இணைந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனனுக்கு அமமுக சார்பில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சாத்தூர் மக்களை சுற்றி சுற்றி வந்து அவர்களுக்கு சேவை செய்ததால் தான் தனக்கு அமமுக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பதாக ராஜவர்மன் கூறியுள்ளார். மேலும் அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |