நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் சாந்தனு இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி, பாக்கியராஜ், யோகி பாபு, மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Here’s #TalkuLessuWorkMoreu lyric video 🤩🎉 sung by @samvishal280999 & @sivaangi_k https://t.co/rjUFa0etjl@dharankumar_c @SonyMusicSouth @AthulyaOfficial @Srijar_Director @LIBRAProduc @FirstManFilms #KuKarthik pic.twitter.com/NT14Z06ADe
— Shanthnu (@imKBRshanthnu) May 27, 2021
மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘டாக்கு லெஸ்ஸு வொர்க் மோரு’ என்ற இந்த பாடலை சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சிவாங்கி மற்றும் சாம் விஷால் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .