பீகார் மாநிலத்தில் “அதிகாரம் பெற்ற மகள்கள் வளமான பீகார்” என்ற தலைப்பில் கருத்துரங்கம் நடைபெற்றது. அதில் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்து உரையாடினார். அப்போது பேசிய மாணவி ஒருவர், அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.20, ரூ.30 சானிட்டரி நாப்கின்கள் அரசால் வழங்க முடியாதா?என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஹர்ஜோத் கவுர், இன்று நாப்கின் கேட்பீர்கள், நாளைக்கு ஜீன்ஸ் பாண்ட் கேட்பீர்கள், அதன் பிறகு ஏன் நீங்கள் ஷூக்களை தரக்கூடாதா என்பீர்கள், கடைசியாக குடும்ப கட்டுப்பாட்டு முறைகளையும் ஏன் ஆணுறைகளும் கூட அரசை தர வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள் என்று தெரிவித்தார்.
இருப்பினும் அந்த மாணவி அவரை விடவில்லை அரசே தேர்ந்தெடுக்க வாக்களிப்பது மக்கள் தானே. அவர்களின் வாக்குகளை தானே அரசே உருவாக்குகின்றது என்று பதிலடி கொடுத்தார். இது நாடு முழுவதும் அவருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வருகின்றனர். இந்நிலையில் சானிட்டரி நாப்கின் விவாகரத்திலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. அதாவது, தமிழகத்தில் அரசு சார்பில் வளரிளம் பெண்களுக்கும் தாய்மார்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை பெண்கள் தன் சுத்தத்தை ஊக்குவிக்க வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான மாதவிடாய் சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் பள்ளி மாணவிகளுக்கும், கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கும், தாய்மார்களுக்கு இலவச சானிடரின் நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் சிறைகளில் உள்ள பெண் கைதிகள், மனநல காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 6 கோடி சானிட்டரி நாப்கின்கள் அரசு சார்பில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நகர்புற பள்ளி மாணவியர்களுக்கும், அனைத்து மருத்துவமனையில் உள்ள நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கும் தமிழக அரசு விரிவு படுத்தி உள்ளது. இதற்கிடையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடும்பொழுது ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில் சானிட்டரி நாப்கின்களின் மீது 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாநிலங்களில் திமுக எம்.பி. சிவா கடுமையாக குரல் கொடுத்தார். அதன் பயனாக பெண்கள் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது என்பது குறிப்பிட்டத்தக்கத்து.