Categories
மாநில செய்திகள்

“சான்றிதல் முதல் அன்றாட பிரச்னைகள் வரை”… இனி வாட்ஸாப்பிலேயே தீர்வு காணலாம்… சென்னை மாநகராட்சி அதிரடி..!!

சென்னை பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது தகவல்களை பெறுவதற்கும் வாட்ஸ்அப் உதவி எண்ணை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி “வாட்ஸ்அப் சிட்டிசன் சர்வீஸ்” என்ற புதிய முயற்சியை துவங்கியுள்ளது. இந்த 94999 33644 எண்ணை  பயன்படுத்தி உங்கள் குறைகளை எழுதி தெரிவிக்க முடியும் என்றும் வருவாய் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த வாட்ஸ்அப் வழியாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும், புகாரின் நிலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 பற்றிய தகவல்கள் ஆன்லைன் சேவை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்து வரி செலுத்துதல், தொழில்முறை மற்றும் வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதில் உள்ள விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது அந்த விருப்பத்துடன் தொடர்புடைய தகவல் கிடைக்க கூடிய வகையில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |