தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குரூப் 1 தேர்வில் தமிழ் வழி பயின்றோர் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றுவது எப்படி என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
அதன்படி www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் படிவங்கள், பதிவிறக்கங்கள் பிரிவில் தமிழ் வழியில் படித்ததற்கானச் சான்றிதழ் படிவங்கள் உள்ளன. புதிய வடிவத்தில் உள்ள தமிழ் வழியில் பயின்ற சான்றிதழை உறுதி அலுவலர்களிடம் பெற்று இணைய சேவை மூலம் பதிவேற்றம் செய்யலாம். மேலும் கூடுதல் விவரங்களை அறிய 18004190958 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.