Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சான்றிதழ் வழங்க 2 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி”…. கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்…!!!!!!

லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்த லியாகத் அலி என்பவர் காஞ்சிச்சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிலநீர் எடுப்பு சான்று வழங்க கோரி சென்னையில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு சென்ற 15-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். இது பற்றி திருவண்ணாமலை உதவி நிலவியல் நிலைநீர் பிரிவு அதிகாரி சிந்தனைவளவன் என்பவரை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டார்கள்.

அதன் பேரில் சில நாட்களுக்கு முன்பாக நேரில் சென்று ஆய்வு செய்த சிந்தனைவளவன் நிலநீர் எடுப்பு சான்றிதழ் வழங்குவதற்காக 2 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் முதல் தவணையாக 50,000 பணம் தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகின்றது. லஞ்சம் கொடுக்க விரும்பாத லியாகத் அலி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன்பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 50,000 பணத்தை சிந்தனைவளவனுக்கு கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சிந்தனை வளவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள். பின் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |