Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை” வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் வாலிபர்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த பெற்றோர்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரகுபதி(25) என்ற மகன் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏஜென்ட் மூலம் குவைத் நாட்டிற்கு ரகுபதி ஓட்டுநர் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டிரைவர் வேலை கொடுக்காமல் வீட்டு வேலை செய்ய வலியுறுத்தி சிலர் ரகுபதியை அடித்து சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தன்னை மீட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என செல்போன் மூலம் ரகுபதி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரகுபதி என் தாய் கொளஞ்சியம்மாள் ஏஜென்டை தொடர்புகொண்டு தனது மகனை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டதற்கு 1 1/2 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால்தான் உங்களது மகனை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் கூறியுள்ளார். எனவே வெளிநாட்டில் தவிக்கும் எனது மகனின் மீட்டு தருமாறு மத்திய மாநில அரசுகளுக்கு கொளஞ்சியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |