Categories
தேசிய செய்திகள்

சாப்பாடு கொண்டுவர இவ்வளவு லேட்டா…? உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற… கணவனின் வெறிச்செயல்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உணவு பரிமாற தாமதமானதால் தன் மனைவியை அடித்துக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவரான விராஜ் கட்ஜப் அவரின் மனைவி ஹாரமணியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் இரவு வீட்டில் இருந்தபோது மது அருந்தியதாக தெரியவந்துள்ளது. பின்னர் மது போதையில் இருந்த விராஜ் தனது தனது மனைவியிடம் இரவு உணவு தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால் அவரது மனைவி உணவு பரிமாற தாமதம் செய்ததாக கூறப்படுகிறது, இதனால் ஆத்திரமடைந்த விராஜ் மனைவியுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதனால் கடும் கோபத்துக்கு உள்ளான விராஜ் அருகில் இருந்த கட்டையால் தனது மனைவியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஹாரமணி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் ஹாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |