Categories
தேசிய செய்திகள்

சாப்பாடு சரியில்லன்னு சொன்னது குத்தமா?… காவலருக்கு நேர்ந்த கதி… மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

நாய் கூட சாப்பிடாது என தங்களுக்கு வழங்கப்படும் உணவைக் காட்டி கதறி அழுத காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதோடு, அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

சென்ற ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத் பகுதியிலுள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத்தட்டுடன் உத்தரப்பிரதேசம் மாநில தலைமைக்காவலர் மனோஜ்குமார் பொதுமக்கள் முன்னிலையில் தன் துயரத்தை வெளிப்படுத்தினார். இதற்கென அவர் பிரோஸாபாத்தில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஸிபூர் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

பலமுறை தரமற்ற உணவு பற்றி உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தப் பயனுமில்லை எனவும்  வெந்ததும் வேகாததுமான தோசைக்கல் போன்ற சப்பாத்தியும், அதை தொட்டுக்கொள்ள ஆறாக ஓடும் தண்ணீர்போல பருப்பும் கொடுப்பதாக அவர் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார். இதனால் அவரை உடனே கட்டிடத்துக்குள் தூக்கிச்சென்ற காவலர்கள், நீண்ட நாள் விடுப்பில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர். மேலும் அவருக்கு தண்டனை மற்றும் பணியிடமாற்றம் காத்திருந்தது. உணவு பற்றி புகாரளித்தபோது அவர் கையில் வைத்திருந்த தட்டில் சில ரொட்டிகளும், கொஞ்சம் அரிசி சாதமும், பருப்பும் இருந்தது.

அதனை கையில் வைத்தபடி சாலையில் போராட்டம் நடத்திய காவலர் “ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை வாங்குகிறார்கள். பணி முடிந்தபின் அந்த ரொட்டிகளைத் தான் காவலர்கள் சாப்பிடவேண்டும். அவ்வளவு ஏன் ஒரு நாய்கூட இதை சாப்பிடாது. எங்களது வயிற்றுக்குள் எதுவுமில்லை என்றால், எப்படித்தான் நாங்கள் வேலை செய்வது..? என்று கேட்டு கதறி அழுதது பலரையும் கலங்க வைத்தது.

அதன்பின் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பாக அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் கூறியதாவது, என் வீட்டில் இளைய சகோதரர்கள், சகோதரி உட்பட நாங்கள் 6 பேர். என் பெற்றோர் வயதானவர்கள், அத்துடன் சிகிச்சையில் இருப்பவர்கள். சுமார் 600 கி.மீ தொலைவில் பணியாற்றிக் கொண்டு அவர்களை பராமரிப்பது மிகவும் சிரமமாகி விட்டது. என் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள் நான்தான் என்று கண்ணீர் மல்க கூறினார். அவரது நண்பர் இதுகுறித்து கூறியதாவது, உணவு என்பது மிகவும் முக்கியம் ஆகும். அது பற்றி புகார் அளித்ததற்காக என் நண்பனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அவன் தினக் கூலியாக இருந்துகொண்டே படித்து இந்த வேலையில் சேர்ந்தான் என்று கூறினார்.

Categories

Tech |