நாகர்கோவில் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் பகுதியில் நாகராஜன்(28) சிவானி (22) ஆகிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி1 1/2 வருடம் ஆகிறது. இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் சிவானி கர்ப்பம் அடைந்தார். ஆனால் திடீரென்று கர்ப்பம் கலைந்துவிட்டது . இதனால் கணவன் மனைவி இருவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட்டபோது சிவானின் சமையல் பிடிக்கவில்லை என்று அவரிடம் சண்டை போட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்து போன ஷிவானி தன் கணவர் வேலைக்கு சென்றவுடன் தனது அறை கதவை பூட்டி வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை. அதனால் அவரின் மாமியார் ஷிவானியின் குடும்பத்தாருக்குஉடனே தகவல் கொடுத்துள்ளர். அதன்பிறகு அவரது பெற்றோர் உடனே ஷிவானின் வீட்டிற்குவிரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் . அங்கு அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .அதன்பிறகு உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதனைப்பற்றிபோலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர்கள் திருமணத்தின் போது வரதட்சணையாக 95 பவுன் மற்றும் ரூ .5 லட்சம் ரொக்க பணமும் கொடுத்து உள்ளோம் என்றும் கூறியுள்ளனர்.அதன் பிறகு ஷிவானி கர்ப்பம் கலைந்தற்காக தன் மகளை கொடுமைப்படுத்தியுள்ளனர்.அதனால் என் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று புகாரில்கூறியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும், கோட்டாட்சியரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.