தாய் ஒருவர் தன் குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ கொளுத்தி கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பொன்முருகன் – குருதேவி. இவர்களுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குருதேவி தனியாக இருந்தபொழுது திடீரென்று குழந்தையின் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
பின்னர் பச்சிளம் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். தாய் மற்றும் குழந்தை இரண்டு பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் குரு தேவியின் கணவர் பொன்முருகன் சம்பவத்தன்று வேலைக்கு கிளம்பும் முன் மதிய சாப்பாடு சீக்கிரமாக ரெடி பண்ணுமாறு கோபத்துடன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த குருதேவி தன் மீதும், குழந்தையின் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.