Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு வைத்த தம்பதியினர்…. ஓட ஓட விரட்டிய காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சாப்பிடுவதற்கு அரிசி வைத்த தம்பதியினரை காட்டுயானை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து அரிசியை எடுத்து சாப்பிட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தொழிலாளியான சையத் அலி-பேகம் தம்பதியினர் யானைக்கு சாப்பிடுவதற்காக அரிசி வைத்துள்ளனர்.

இதனை பார்த்ததும் யானை 2 பேரையும் துரத்தியதோடு, அவர்களது வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனை அடுத்து எம்எல்ஏ அமுல் கந்தசாமி தொழிலாளியின் வீட்டிற்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறியுள்ளார்.

Categories

Tech |