Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க உப்பு போட்டு சாப்பிட்டா…. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…. செந்தில் பாலாஜி ஆவேசம்…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் வார்த்தைப்போர் மூண்டு வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்குவதாகவும், அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். பெரியார் விளக்கத்தை சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.

உண்மையாகவே நீங்க நல்ல மனிதராக இருந்தால், சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடும் மனிதராக இருந்தால் நான் கேட்டதற்கு ஆதாரத்தோடு வெளியிடவேண்டும். எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக இப்படி செய்கிறார். அரவக்குறிச்சியில் இருந்து அனுப்பிவிட்டோம் கோயம்புத்தூரில் கூட அவர்களுடைய திட்டங்கள் இருக்கலாம். தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக அண்ணாமலை பேசுகிறார். நீங்களே சொல்லுங்கள் சார் இதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |