விஷப்பூச்சி கடித்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மகளத்தூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளியிலிருந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒரு விஷப்பூச்சி மாணவியை கடித்துள்ளது.
இதனால் மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து கீழ்குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.