Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சாப்பிடுவதற்கு சென்ற நகை வியாபாரி” 9 பேரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நகையை திருடி சென்ற 9 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில்  மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மொத்த நகை  வியாபாரிகளிடம் இருந்து நகைகளை வாங்கி சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மணி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக நகையுடன் சென்றுள்ளார். இதனையடுத்து மணி தனது நகை  பையை தனது காலுக்கு அருகே வைத்துவிட்டு கவுண்டரில் பில் கொடுப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது தனது காலின் அருகில் வைத்திருந்த நகை பையை அங்கே நின்று கொண்டிருந்த 9 பேர் தூக்கி விட்டு தப்பியோடிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |