பானி பூரி வியாபாரியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த அமர்சிங் என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலையில் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி இவரின் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த பணத்தை வாலிபர் கொடுக்கவில்லை. இதனையடுத்து அமர் சிங் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் பணத்தை கொடுக்காமல் அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அமல் சிங்கை கீழே தள்ளி அவரை கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அமர்சிங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவரது மண்ணிரலில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அறுவகை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அமர்சிங் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் அமர் சிங்கை தாக்கியது திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த விக்கி என்பது தெரியவந்தது. இதனையடுத்து விக்கியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.